×

கூட்டணி தலைவர் எடப்பாடி மேலும் பல கட்சிகளுடன் ேபச்சு: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

 

மதுரை, மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில், வரும் மார்ச் 1ம் தேதி தே.ஜ. கூட்டணி சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கிருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், புதிய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து சுற்றுச்சாலை பகுதியில் பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கான திடல் அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தே.ஜ கூட்டணியின் அனைத்துக் கட்சி தலைவர்களும், மார்ச் 1ம் தேதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பக்தர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்ம் தேதி (இன்று) வீட்டில், வாசலில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்.

எங்கள் கூட்டணி பலமாகவே உள்ளது. கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மேலும் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இரட்டை இன்ஜின் அரசு என்பது, இன்று வேகமான முன்னேற்றம் கண்டுள்ளது. பீகார், அரியானா, மகாராஷ்டிரா, உபி உள்ளிட்ட மாநிலங்களில் இது நடந்துள்ளது. தமிழகத்திலும் இரட்டை இன்ஜின் அரசை தமிழக மக்கள் விரும்புகிறார்கள். ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது போல் பேசுவது குறித்து, அவரிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Edappadi ,Union Minister ,L. Murugan ,NDA ,Mandela Nagar ,Madurai ,Modi ,Madurai AIIMS Medical College Hospital ,
× RELATED என்டிஏ கூட்டணி பேனரில் நயினார் படம்...