×

விம்ஸ் மருத்துவமனையின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுசேலம், பிப்.8: சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து சாலை பாதுகாப்பு -உயிர் பாதுகாப்பு முகாமினை நடத்தியது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார். தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி, போக்குவரத்து காவல் ஆய்வளார் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, வாகனங்கள் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில் துறையின் வாகன ஓட்டுநர்கள், மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறையின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் தனசேகர், வர்ஷினி மற்றும் அலுவலக நிர்வாக மேலாளர் டாக்டர் செந்தில்நாதன் செய்திருந்தனர்.  ...

Tags : Allied Health Sciences Department ,Wims Hospital ,
× RELATED தேசிய பெண் குழந்தைகள் தினம்