×

கம்மாபுரம் பகுதியில் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையம் தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: முதல்வர் கடந்த 16ம் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் துவக்கி வைத்த ஒருங்கிணைந்த சேவை மையங்கள் தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவிற்கான தமிழ்நாடு அரசின் மறுப்பு அறிக்கை: முதல்வர் கடந்த 16ம் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கடலூர் பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையம் அந்த இடத்தில் இயங்கவில்லை என எக்ஸ் தளத்தில் தவறாக பதிவிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் முதல்வரால் கடந்த 16ம் தேதி கம்மாபுரம் பகுதியில் மட்டுமே மையம் துவக்கி வைக்கப்பட்டது. காணொலியில் ஏற்கனவே துவக்கி வைக்கப்பட்ட கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மையத்திற்கு பதிலாக இன்னும் துவக்கப்படாத கடலூர் நகராட்சியின் மையம் தவறுதலாக இடம் பெற்றுள்ளது. கடலூர் நகராட்சிப் பகுதியில் ஏற்கனவே துவக்கி வைக்கப்பட்ட அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையம் சிறப்பாக இயங்கி வருகிறது.

Tags : Kammapuram ,Tamil Nadu government ,Chennai ,X ,Chief Minister ,Disabled Welfare Department ,Cuddalore… ,
× RELATED நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான...