×

புற்றுநோயாளிகளுக்கு முடி தானம்

கோவை, பிப். 8:  கீமோதெரபி காரணமாக தலைமுடியை இழந்த புற்றுநோயாளிகளுக்கு விக் பொருத்த உதவும் வகையில்  இந்திய மருத்துவ சங்கத்தின் பெண்கள் பிரிவு மருத்துவர்கள் முடி தானம் செய்தனர். பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களில் பலர் விக் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தானமாக விக் பெற்று அதை அவர்களுக்கு வழங்குவதற்காக சென்னையை சேர்ந்த செரியன் அறக்கட்டளையுடன் இணைந்து இந்த புதிய முயற்சியில் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.  

அதன்படி, இந்திய மருத்துவ சங்கத்தின் பெண்கள் பிரிவு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்பட பலர் தங்களின் முடியை தானம் செய்தனர். இந்த தானமாக பெறப்பட்ட முடி அடையாறு புற்றுநோய் நிறுவனம் மற்றும் பெங்களூரை சேர்ந்த சங்கரா புற்றுநோய் நிறுவனத்தை சேர்ந்த நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

Tags : cancer patients ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் புற்று...