×

பாய்லரில் வைத்து பால் பாக்கெட் சூடு செய்த ஆவின் பாலகத்திற்கு நோட்டீஸ்

கோவை, பிப். 8: கோவை அவினாசி சாலை தண்டு மாரியம்மன் கோயில் எதிரே செயல்படும் டீ கடைகளில் பால் பாக்கெட்டுகளை பாய்லரின் மேல் வைத்து சூடு செய்வதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, அங்கு செயல்பட்டு வந்த ஆவின் பாலத்தில் உணவுத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு பால் பாக்கெட்டுகளை பாய்லரில் வைத்து சூடு செய்து வந்தது கண்டறியப்பட்டது. மேலும், அங்கிருந்த தடை செய்யப்பட்ட 1.2 கிலோ பிளாஸ்டிக் கவர், பஜ்ஜி போன்றவற்றிக்கு பயன்படுத்தப்பட்ட கூடுதல் நிறமி, பழைய பேப்பர், லேபிள் இல்லாமல் இருந்த உணவு பொருட்கள், காலாவதியான சோடா ஆகியவற்றை உணவுத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஆய்வின்போது கடை லைசென்ஸ் பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாகவும், பாய்லரில் வைத்து பால்பாக்கெட் சூடு செய்தது தொடர்பாகவும் கடைக்காரருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. பாய்லரில் வைத்து பால்பாக்கெட் சூடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உடனடி அபராத தொகை விதிக்கப்படும் எனவும் மாவட்ட உணவுத்துறை நியமன அதிகாரி எச்சரித்துள்ளார்.

Tags :
× RELATED குருந்தமலை அடிவாரத்தில் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த நபர் கைது