×

திண்டுக்கல் அருகே சலவை தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி

திண்டுக்கல் பிப். 21: திண்டுக்கல் அருகேயுள்ள முத்தழகுபட்டியை சேர்ந்தவர் சேகர் (55). சலவை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலையில் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நந்தனார்புரம் அருகேயுள்ள குவாரி பாறை குளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் துணி துவைப்பதற்காக வீட்டை விட்டு சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது எடுக்கவில்லை. இதையடுத்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று குவாரி பாறை குளத்தில் சேகர் இறந்த நிலையில் மிதப்பது தெரியவந்தது. தாடிக்கொம்பு எஸ்ஐ சித்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் சேகர் கையில் பிளாஸ்டிக் பக்கெட்டுடன் துணி துவைப்பதற்காக பாறையில் இறங்கிய போது தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Dindigul ,Shekhar ,Muthalagupatti ,Nandanarpuram ,Chettinayakkanpatti ,
× RELATED ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்படும்...