- ஐயா
- இந்திய தேர்தல் ஆணையம்
- தில்லி
- கர்நாடக
- ஆந்திரப் பிரதேசம்
- தெலுங்கானா
- மகாராஷ்டிரா
- மணிப்பூர்
- ஒடிசா
- பஞ்சாப்
- யூனியன் பிரதேசங்கள்...
டெல்லி: டெல்லி: 3ம் கட்டமாக ஏப்ரல் மாதம் முதல் 22 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மணிப்பூர், டெல்லி, ஒடிசா, பஞ்சாப் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெறும். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளது.
கடந்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டது. அதன்படி தமிழ்நாடு, சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
