×

துணி உற்பத்தி தொழில் ஆலோசனை கட்டம்

திருப்பூர், பிப்.5:  திருப்பூரில் வீட்டு உபயோக துணி உற்பத்தி தொழில் ஆலோசனை கூட்டம் இன்று (5ம் தேதி) நடக்கிறது. வீட்டு உபயோக துணி உற்பத்தி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயிப்பதற்காக தமிழக அரசு, ஆலோசனை குழு அமைத்துள்ளது. திண்டுக்கல் தொழிலாளர் துறை இணை கமிஷனர் கோவிந்தன் தலைமையிலான இந்த குழுவில், தொழிலாளர் துறை, புள்ளியியல் துறை, அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) அலுவலகத்தில் இன்று நடக்கிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் (டாஸ்மா) உட்பட பல்வேறு ஜவுளி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில், திருப்பூர் பகுதி ஜவுளி உற்பத்தி தொழிலாளர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை மனுவாக அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்