×

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ

திருப்பூர், பிப்.20: திருப்பூர் மாநகர பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுவன், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளான். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே, அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொங்குநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், அந்த சிறுவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

Tags : POCSO ,Tiruppur ,Tiruppur city ,
× RELATED காத்திருப்பு போராட்டம்