×

காத்திருப்பு போராட்டம்

தாராபுரம், பிப்.20: தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கத்தினர் வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கருப்பு பட்டைகள் அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டத்தலைவர் குப்புராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் தென்னரசன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சிவக்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

Tags : Tarapuram ,Tamil Nadu Revenue Department Village Employees' Union ,Tarapuram taluka ,Kuppuraj ,Thennarasan… ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ