×

குப்பை கழிவுகளில் தீ விபத்து மின் கேபிள்கள் எரிந்து நாசம்

ஈரோடு, பிப்.5:  ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் பெரும்பள்ளம் ஓடையில் ஸ்டோனி பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மக்கள், வியாபாரிகள் குப்பை கழிவுகளை கொட்டி வந்தனர். நேற்று மாலை குப்பை கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. அங்கு ஏற்கனவே புற்கள், செடி கொடிகள் காய்ந்திருந்தால் தீ மளமளவென பிடித்து அருகே இருந்த பாதாள மின் கேபிள்களில் பரவியது. இதனால், அங்கிருந்து கரும்புகை வரத்துவங்கியது. தகவல் அறிந்த மின்வாரியத்தினர் உடனடியாக மின் இணைப்பினை துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் பாதாள மின் கேபிள்கள் எரிந்து நாசமானது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Tags : fire accident ,garbage dump ,
× RELATED புகையிலை பொருள்கள் மது விற்ற 2 பேர் கைது