×

எஸ்ஐஆர் பணி உ.பி.யில் 3.26 கோடி வாக்காளர்களுக்கு நோட்டீஸ்

லக்னோ: உ.பி. தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா கூறுகையில், ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் கீழ் 3.26 கோடி வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது. இதுவரை 1.85 கோடி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1.15 கோடி பேரிடம் விசாரணைகள் முடிக்கப்பட்டுள்ளன. பெயர்களைச் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் படிவம் 6 இல், ஜனவரி 6 முதல் பிப்ரவரி 17 வரை 54.4 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பெயர்களை நீக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் படிவம் 7 மொத்தம் 1,40,425 விண்ணப்பங்கள் பெறப்பட்டது ’ என்றார்.

Tags : SIR Pani ,UP ,Lucknow ,Chief Electoral Officer ,Navdeep Rinva ,
× RELATED 10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை...