×

மகாராஷ்டிராவில் இஸ்லாமியருக்கான 5% ஒதுக்கீடு ரத்து செய்தது பாஜ அரசு

மும்பை: மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களுக்கு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இட ஒதுக்கீட்டை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பாஜ தலைமையிலான மாநில அரசு ரத்து செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்திந்திய மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் எம்பி இம்தியாஸ் ஜலீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களிடம் பேசிய இம்தியாஸ் கூறுகையில், ஆளும் கட்சியின் தலைவர்கள் இன்னும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அதன் உறுப்பினர்கள் தங்களது கார்களை கழுவுதல், பகோடா வறுத்தல் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டவேண்டும் என்ற மனநிலையிலேயே வைத்து இருக்கிறார்கள் ” என்றார்.

Tags : BJP government ,Maharashtra ,Mumbai ,Chief Minister ,Devendra Fadnavis ,Muslims ,All India Majlis-e-Ittehadul Muslimeen ,AIMIM ,
× RELATED வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில்...