புதுடெல்லி: பட்ஜெட் தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பல்வேறு திட்டங்களின் கீழ் பெண்கள் மற்றும் சிறுவர்,சிறுமிகளுக்கான ஒதுக்கீடு 2026-27 ம் ஆண்டில் 11.55 % உயர்ந்து ரூ.5.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.4.49 லட்சம் கோடியாகும். இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலின பட்ஜெட் அறிக்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பிரத்தியேக திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும், அவர்களுக்கு பயனளிக்கும் பரந்த திட்டங்களில் செலவினங்களின் விகிதமும் அடங்கும். இது பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சகங்கள் முழுவதும் மொத்த ஒதுக்கீடுகளை ஒன்றிணைக்கிறது. பட்ஜெட்டில் பாலின பட்ஜெட் ஒதுக்கீட்டின் பங்கு 2026-27 ஆம் ஆண்டில் 8.86 சதவீதத்திலிருந்து 9.37 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த ஒதுக்கீட்டின் ரூ.1,07,688 கோடியில் ஒன்பது அமைச்சகங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தால் பெறப்பட்ட 21.50 சதவீதத்தில் சில திட்டங்கள் 100 சதவீதம் பெண்கள் நலனை மையமாக கொண்டவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
