×

ஆன்லைன் கேமிங் செயலி வழக்கு அமெரிக்கா, சிங்கப்பூரில் ரூ.500 கோடி முடக்கம்

புதுடெல்லி: வின்சோ ஆன்லைன் கேமிங் செயலிக்கு சொந்தமான அமெரிக்கா, சிங்கப்பூர் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.500 கோடியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. மேலும் பல்வேறு ஆன்லைன் செயலிகளை முடக்கியது. இதே போல் வின்சோ மொபைல் செயலி மூலம் 25 கோடி பேர் இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை பணம் கட்டி விளையாடுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

மேலும் வின்சோ நிறுவனத்திற்கு எதிரான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.500 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகையை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த தொகை வின்சோ யுஎஸ் இன்க் மற்றும் வின்சோ எஸ்ஜி பிரைவேட் லிமிடெட் சிங்கப்பூர் போன்றவற்றின் பெயர்களில் வைக்கப்பட்டுள்ளன. அவை வின்சோ நிறுவனத்தின் பவன் நந்தா மற்றும் சௌம்யா சிங் ரத்தோர் ஆகியோரால் இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் மொத்த பறிமுதல் தொகை ரூ.1194 கோடியாக உயர்ந்துள்ளது.

Tags : US, Singapore ,New Delhi ,The Enforcement Directorate ,US ,Singapore ,Union government ,
× RELATED டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாயை,...