×

மபியில் 10 ம் வகுப்பு தேர்வில் முறைகேடு வாட்ஸ் அப்பில் வினாத்தாளை பகிர்ந்த ஆசிரியை உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட்

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் 10ம் வகுப்பு தேர்வின் போது ஆங்கில வினாத்தாளை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து மோசடி செய்ய உதவிய குற்றச்சாட்டில் ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மத்திய பிரதேசம்,பர்ஹான்பூர் மாவட்டம், துஹைத்ஹாடில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து வருகிறது. அந்த பள்ளியில் நேற்று ஆங்கில தேர்வு நடந்தது. அந்த மையத்தில் மேற்பார்வையாளராக ராஜ்குமாரி சோனி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை தேர்வு துவங்கியதும் ராஜ்குமாரி சோனி தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வினாத்தாளின் புகைப்படத்தை வைத்துள்ளார்.

தேர்வு மையத்துக்கு வெளியில் இருந்த ஒருவரிடம் தேர்வர்கள் காப்பி அடிப்பதற்கு வசதியாக விடையை அனுப்புமாறு கேட்டுள்ளார். தேர்வு வினாத்தாளை ஆசிரியை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த நிலையில் இது தொடர்பான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்மந்தப்பட்ட ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக எஸ்பி தேவேந்திர குமார் படிதார் தெரிவித்தார். இதற்கிடையே, தேர்வு மைய கண்காணிப்பாளர் ஜிதேந்திர குல்கர்னி, உதவி கண்காணிப்பாளர் அனிதா தீட்சித், ஆசிரியை ராஜகுமாரி சோனி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து இந்தூர் கோட்ட வருவாய் ஆணையாளர் சுதாம் காடே உத்தரவிட்டுள்ளார்.

Tags : Madhya Pradesh ,Indore ,Duhaithad, Burhanpur district, Madhya Pradesh ,
× RELATED டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாயை,...