×

திண்டிவனம் அருகே புதூர் கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் பள்ளி சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம்

திண்டிவனம், பிப். 18: திண்டிவனம் அருகே புதூர் கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் பள்ளி சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை புதூர் கிராமத்தில் தொடர்ச்சியாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருக்கும்போது அங்கு சுற்றித்திரிந்த வெறி நாய் சிறுவர், சிறுமிகளை கடித்துள்ளது. இதில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேரை வெறிநாய் கடித்துள்ளது. இதில் 3 மாணவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையிலும், மேலும் 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நாளில் பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேரை வெறி நாய் கடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Puthur village ,Tindivanam ,Vellimedupettai ,Villupuram ,
× RELATED பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டதால் தகராறு: 3 பேர் காயம்