×

ரூ.1.20 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் செங்கம் நகராட்சி மில்லத் நகர் 5வது வார்டில்

செங்கம், பிப்.18: செங்கம் நகராட்சி மில்லத் நகர் 5வது வார்டில், ரூ.1.20 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். செங்கம் நகராட்சி 5வது வார்டு மில்லத் நகர் பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று மில்லத் நகர், 5வது வார்டு பகுதியில் சிமெண்ட சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமையில் நடைபெற்றது. அப்போது பூஜை செய்து பணியினை எம்எல்ஏ மு.பெ.கிரி தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா, நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சென்னம்மாள் முருகன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அப்துல் சத்தார், வார்டு கவுன்சிலர் ஜாப்பீர் பாஷா, மணி என்கிற பெரியதுரை, முன்னாள் கவுன்சிலர்கள் அப்துல் வாகித், தாவூத், முருகமணி, நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : MLA ,Millath Nagar ,ward ,Chengam Municipality ,Chengam ,Bhoomi ,
× RELATED கலைஞர் கனவு இல்லம் கட்ட 40 பேருக்கு பணி...