×

விவசாயி வீட்டில் 5 சவரன், பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை ெசய்யாறு அருகே துணிகரம்

செய்யாறு, மார்ச் 12: செய்யாறு அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 5சவரன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன்(58), விவசாயி. இவரது மனைவி யோகலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தீனதயாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக்கொண்டு, பக்கத்து கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவிற்கு சென்றனர். நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அறைக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5சவரன் நகை, ரூ. 40ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தீனதயாளன் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோபால், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ேமலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags : Cheyyar ,Deenadayalan ,Moonjurpattu ,Vempakkam ,Tiruvannamalai district ,
× RELATED ரூ.5.79 கோடியில் புதுப்பாளையம் ஊராட்சி...