×

3வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல் 177 பேர் கைது திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, பிப்.5: திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 177 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கடந்த 3ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, முதல் நாளன்று அண்ணா சிலை முன்பும், இரண்டாம் நாளன்று கலெக்டர் அலுவலகம் முன்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, 3வது நாளாக நேற்று திருவண்ணாமலை பெரியார் சிலை சந்திப்பு பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். அப்போது, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க ேவண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ₹50 லட்சம் இழப்பீடு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹2 லட்சம் நிதியுதவி வழங்க ேவண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 122 பெண்கள் உட்பட மொத்தம் 177 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மூன்றாம் நாள் போராட்டத்திலும் சத்துணவு பணியாளர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

Tags : road blockade ,Thiruvannamalai ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்