×

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்.. கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செய்தார். தமிழக சட்​டப்​பேர​வை​யின் இந்த ஆண்டு முதல் கூட்​டம் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி தொடங்​கியது. ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் பேர​வையை விட்டு வெளி​யேறி​னார். தொடர்ந்து ஆளுநர் உரை​யின் தமிழாக்​கத்தை பேர​வைத் தலை​வர் அப்​பாவு வாசித்​தார். உரையை ஆளுநர் வாசித்ததாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்​னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் ஜனவரி 22ம் தேதி தொடங்​கியது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 24ம் தேதி பதில் அளித்​தார். இதையடுத்​து, மறு​தேதி குறிப்​பி​டா​மல் பேரவை ஒத்தி வைக்​கப்​பட்​டது.

தமிழகத்​தில் சில மாதங்​களில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ள​ நிலையில் 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு இன்று தாக்கல் செய்​கிறார். இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.

Tags : Tamil Nadu ,Interim Budget Minister ,Gold South Rasu ,Chennai ,Minister ,Dhanaram Thanarasu ,Tamil Nadu Legislative Branch ,Governor ,R. N. Ravi ,
× RELATED தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்.. கலைஞர்...