×

வனத்துறை ஊழியர் உடலை இறுக்கி கொன்ற மலைப்பாம்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய ஜஸ்டிஸ் பகவதி நகரை சேர்ந்தவர் முத்தையா(62). இவர் வனத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டு குழுவில் பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டில் வளர்க்கும் மாடுகளை நேற்று முன்தினம் காலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். மாலையில் மாடுகளை ஓட்டி வருவதற்காக வனப்பகுதிக்கு சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து உறவினர்கள் இரவில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர். அப்போது மலைப்பகுதியில் முத்தையா இறந்த கிடந்துள்ளார். அவரது அருகே பெரிய மலைப்பாம்பு ஒன்று இருந்தது. மம்சாபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், முத்தையாவின் உடலை மலைப்பாம்பு இறுக்கி, அவரது முகத்தில் கடித்து கொன்றிருக்கலாம் என தெரியவந்தது.

Tags : Srivilliputhur ,Muthaiah ,Justice Bhagavathy ,Nagar ,Virudhunagar district ,Western Ghats ,Shenbagathope Environmental Development Committee ,
× RELATED நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான...