×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வருகிற மே மாதத்திற்கான (சுப்ரபாதம், தோல்மாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதன சேவைகளுக்காக பிப்ரவரி 18ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். இந்த சேவைகளுக்காக பிப்ரவரி 20ம் தேதி காலை 10 மணி வரை எலக்ட்ரானிக் குலுக்கல் மூலம் பெற ஆன்லைனில் பதிவு செய்யலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரமோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை டிக்கெட்டுகள் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.

இதே சேவைக்கு நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் செல்லும் விர்சுவல் சேவைக்கு 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் பெற 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீவாரி சேவை, உண்டியல் காணிக்கை எண்ணும் ) பரகாமணி சேவைகளுக்கான 27ம் தேதி வெளியிடப்படும்.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Tirumala ,Tirupati Ezhumalaiyan Temple Devasthanam ,Subrapadham ,Dholmalai ,Archanai ,Ashtala Pada Padmaradhana ,
× RELATED தேசப் பாதுகாப்பில் அரசியல் வேண்டாம்:...