×

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்த சென்னை ஒன் செயலி சீரானது: மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்த சென்னை ஒன் செயலி சீரானது என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கோளாறு சரி செய்யப்பட்டதால் சென்னை ஒன் செயலி மூலம் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறால் சென்னை ஒன் செயலி காலையில் செயல்படவில்லை. காலையில் காகிதத்திலான கைமுறை பயணசீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டது.

சென்னை ஒன் செயலி சீரானதால் யு.பி.ஐ., என்.சி.எம்.சி., கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஒன் செயலி வழக்கம்போல் செயல்படுவதாக MTC விளக்கம் அளித்துள்ளது. தங்கள் பயணங்களுக்கான டிக்கெட்டை தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Municipal Transport Corporation ,Chennai ,MTC ,
× RELATED தஞ்சை அருகே சாலியமங்கலத்தில்...