- அஇஅதிமுக
- பாஜக
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- மதுரை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக இளைஞர் மாவட்டம்
- மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
- மதுரை சிந்தாமணி...
மதுரை: தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்த பாஜ மற்றும் அதிமுக முயற்சி செய்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரசுடன் கூட்டணி இறுதி செய்வது குறித்து தலைவர் முடிவெடுப்பார். கடந்த முறை போல இந்த முறையும் 170 இடங்களில் திமுக போட்டியிடுவது குறித்தும் தலைவர் முடிவெடுப்பார். ஓட்டு போடுவது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். முதல்வர் வழங்கிய ரூ.5 ஆயிரம் நிதி தேர்தலுக்காக கொடுத்தது இல்லை.
பாஜ மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வரப்போகிறது. அது நிறைய பேருக்கு தெரியவில்லை. ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் ஒரு முறை இதேபோல நீதிமன்ற அனுமதி மூலம் திட்டத்தை நிறுத்தினார்கள். அதுபோல இங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த வேண்டும் என பாஜ மற்றும் அதிமுகவினர் முயற்சி செய்தார்கள். அந்த மாநிலத்தில் ஏற்பட்ட நிலைமை இங்கு வரக்கூடாது என்பதற்காக தலைவர் முன்னேற்பாடாக மகளிருக்கு நிதி கொடுத்திருக்கிறார். நிதி மாற்றம் குறித்து முதல்வர் முறையாக பதிலளிப்பார். இவ்வாறு தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், பி.மூர்த்தி உள்ளிட்ேடார் பங்கேற்றனர்.
* ‘தன்னை பார்த்துதான் திமுகவை அண்ணாவே ஆரம்பிச்சாருன்னு விஜய் சொல்லுவாரு…’
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தில் பணிபுரியும் அரவிந்தன் என்பவரது சகோதரர் திருமணம் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரை முல்லை நகர் பகுதியில் உள்ள அரவிந்தன் வீட்டிற்கு நேற்று மாலை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசு ரூ.5 ஆயிரம் மகளிர் உதவித்தொகை கொடுத்தது குறித்து, என்னிடம் ஏராளமான பெண்கள் முதல்வரிடம் நன்றி சொல்லுங்கள் என்றனர். அதுவும் முதல்வரை அப்பா என்றும், அண்ணன் என்றும் உறவாக குறிப்பிட்டு நன்றி சொல்லுங்கள் என்றனர். விஜய் கூட்டங்களில் உயிரிழப்பு நடப்பது குறித்து கேட்கிறீர்கள். இதை யாரிடம் கேட்கணும்? என்னிடமா கேட்கணும்? உண்மையா இதுக்கு யார் பொறுப்பேற்று, யார் பதில் சொல்லணும்? அறிஞர் அண்ணாவே இவரை (விஜய்) பார்த்து தான் திமுகவையே ஆரம்பித்தார் என்று கூட சொல்வார்’’ என்றார்.
