- எடப்பாடி
- NEET
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தொழிற்சங்கம்
- காசி முத்து மானிக்கம்
- சென்னை
- சேக்கிழார்
- கம்பராமாயணம்
சென்னை: 7.5 சதவீதம் சரி 92.5 சதவீதம் தமிழகத்தில் நீட் நுழைய விட்ட துரோகி எடப்பாடி அல்லவா என்று வர்த்கதகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று சொன்ன மூளை, பிடித்த புத்தகம் என ஒரு புத்தகத்தின் பெயரை சொல்ல முடியாத மூளை, 13 பேர் சுட்டுக்கொன்றதை டிவியில் பார்த்து மட்டுமே தெரிந்து கொண்ட மூளையில், 7.5% உதித்ததாம், ”சத்துணவு திட்டம்” என்றால், காமராஜ் தந்த மதிய உணவை கூறக்கூடாதா? சத்துணவு திட்டத்தை வாரத்துக்கு ஐந்து முட்டையுடன் உண்மையான சத்தான உணவாக தந்த கலைஞர் பெயரை சொல்லக் கூடாதா?
மருத்துவத்தில் 7.5 சதவீத ஒதுக்கீடு வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்திய போதே, எடப்பாடி ”போராட்டம் வேண்டாம்” எனக்குள்ள அதிகாரத்தில் போட்டுக்கொள்ளப் போகிறேன் என எடப்பாடி அறிவிக்கவில்லையே ஏன்? உங்களுக்கு ஒன்றிய அரசு மற்றும் நீதிமன்ற ஆதரவின்றி அறிவிக்க முடியும் என்றால் 7.5 சதவீதத்துக்கு பதில் 69 சதவீதம் அறிவிக்கலாமே?. 7.5 சதவீதம் நாங்கள் தான் என்று எங்கும் கூறவில்லை. நாங்களும் கடுமையாக போராடிய பின்தான் 7.5% கிடைத்தது என்று தான் சொன்னார். ஜெயலலிதாவும், நீங்களும் சென்னைக்கு மெட்ரோ ரயில் நான் தான் கொண்டு வந்தேன் என பொய் சொன்னதைப் போல் நீட் 7.5 நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று சொல்லவில்லை. எங்களுக்கு உள்ள பிரச்னை இந்த 7.5%க்கு அல்ல, 92.5 சதவீதம் தமிழ்நாட்டின் உள்ளே நீட் நுழைய அனுமதித்தது யார்?
மருத்துவத்தில் 7.5% ஒதுக்கியது மட்டுமே உங்கள் அரசு, 7.5 சதவீதத்தில் வந்தவர்களுக்கு படிப்பு செலவு, சாப்பாடு செலவு, தங்கும் விடுதி என அரசு செலவில் அமைத்ததுடன், அதை விரிவு செய்து இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சர், சட்டப்படிப்பு என நீட்டியது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத சாதனை. இந்தியா முழுவதும் நீட் அமலில் இருந்த போதும், கலைஞர், ஜெயலலிதாவும் தமிழகத்திற்கு நீட் நுழையவிடாமல் தடுத்தார்கள். ஆனால் சிவப்பு கம்பளம் விரித்து 92.5 சதவீதத்தை உள்ளே நுழைய விட்டது அடிமை பழனிசாமி அரசு.
2019 மார்ச் 4ம் தேதி தலைமை செயலகத்தில் 39 பேர் குடும்பத்தினர்க்கு மட்டும் 78 லட்சத்தை மட்டும் வழங்கிவிட்டு, தேர்தல் ஆணையத் தடுப்பால் தரவில்லை என சொன்னாரே தவிர, அதற்குப்பின் 2021 வரை ஆட்சியில் இருந்த எடப்பாடி 59 லட்சத்து 99 ஆயிரத்து 961 குடும்பத்தை ஏமாற்றிவிட்டு சென்றார். நம்மைப்போல் மாதாமாதம் அல்ல ஒரு கோடியே முப்பது லட்சம் பேருக்கும் அல்ல. 60 லட்சம் என அறிவித்து அதையும் வெறும் 39 குடும்பத்திற்கு கொடுத்ததற்கு விளம்பரம் செலவு மட்டும் 1 கோடியே 71 லட்சம், இந்த லட்சணத்தில் விளம்பரம் செய்கிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலினை பற்றி பேசிட எடப்பாடிக்கு என்ன தகுதியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
