×

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகிய காளியம்மாள் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் இறுதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்தபோது மனைவி கயல்விழிக்கு, சீமான் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த பதவியை தனக்கு தர வேண்டும் என கேட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார்.

கட்சியில் இருந்து விலகிய அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசினார். பிறகு திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளிடம் காளியம்மாள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இணைந்து 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதுபோல் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வடசென்னையிலும், 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியிலும் போட்டியிட்டார். அப்போது மைக் சின்னத்தில் போட்டியிட்ட அவர் 1.25 லட்சம் வாக்குகளை பெற்ற நாதக வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kaliammal Atamughal ,Chennai ,Kaliammal ,Tamil Party ,Eadapadi ,Atamugwal ,DAVEGA ,DIMUKA ,ADIMUKA ,
× RELATED சட்டமன்றத் தேர்தலில் திமுக...