×

தீராத வயிற்றுவலி முதியவர் தற்கொலை

முத்துப்பேட்டை, பிப். 14: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த புத்தகரம் காரைத்திடல் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சிவலிங்கம்(53). விவசாய கூலித்தொழிலாளியான இவர் சமீபகாலமாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வயிற்றுவலியால் அவதிப்பட்ட சிவலிங்கம் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்து கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் சிவலிங்கத்தை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிங்காரவடிவேல் பிரேத பரிசோதனைக்காக சிவலிங்கம் உடலை அனுப்பி வைத்தார். இது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags : Muthupettai ,Sivalingam ,Sokkalingam ,Buddhagaram Karaitidal ,Tiruvarur ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்