- கோட்டகுப்பம்- எம்.எல்.ஏ.
- லட்சுமணன்
- சின்ன முதலியார்சாவடி கடற்கரை
- காலாப்பட்டு
- கோட்டகுப்பம் நகராட்சி
- சின்ன
- முத்துலையார்சாவடி
- கோட்டக்குப்பம் பேரூராட்சி பேரூராட்சி
- ஜெயமூர்த்தி
- விழுப்புரம்…
காலாப்பட்டு, பிப். 14: கோட்டக்குப்பம் நகராட்சி 4வது வார்டு சின்னமுதலியார்சாவடி மீனவர் பகுதியில் ரூ.11.72 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. கோட்டக்குப்பம் நகராட்சி நகரமன்ற தலைவர் ஜெயமூர்த்தி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமிபூஜை செய்து தூண்டில் வளைவு அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளரும் 4வது வார்டு திமுக கவுன்சிலருமான வீரப்பன் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள். புஷ்பராஜ், மாரிமுத்து, கோட்டக்குப்பம் நகராட்சி நகரமன்ற துணைத்தலைவர் ஜீனத்பீவி முபாரக், மீனவரணி அமைப்பாளர் மணி, மருத்துவஅணி தலைவர் வினோ பாரதி, திமுக நகர நிர்வாகிகள், கிளைசெயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 4வது வார்டு திமுக செயலாளர் அசோகன் நன்றி கூறினார். முன்னதாக நகர செயலாளர் ஜெயமூர்த்தி தலைமையில் கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
