×

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

திட்டக்குடி, பிப். 11: கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா நகர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(23). இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை அவரது அக்கா வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி, திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் போலீசார், போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மகேந்திரனை கைது செய்தனர்.

Tags : Thittakudi ,Mahendran ,Veppur taluka Nagar ,Cuddalore district ,
× RELATED புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது