- அம்மன் வீதியுலா
- கடலூர்
- நாகம்மன் வீதியுலா
- கடலூர் பஸ் ஸ்டாண்ட் நாகம்மன் கோவில் திருவிழா
- கடலூர் இந்து சமய அறநிலையத் துறை
- திருப்பாதிரிப்புலியூர்
- பஸ் ஸ்டாண்ட்
- நாகம்மன்…
கடலூர், பிப். 14: கடலூர் பேருந்து நிலையம் நாகம்மன் கோயில் திருவிழாவில் புஷ்ப வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஏற்பாட்டில் 13 டன் புஷ்ப அலங்காரத்துடன் நாகம்மன் வீதி உலா நடைபெற்றது. கடலூர் இந்து சமய அறநிலையத்துறை திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் நாகம்மன் கோயில் அமைந்துள்ளது. கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. கடலூர் பூக்கடை புஷ்ப வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஏற்பாட்டின்பேரில் புஷ்ப பல்லக்கு அமைக்கப்பட்டு அம்மன் வீதி உலா நடைபெற்றது. 13 டன் பூக்களால் புஷ்ப பல்லக்கு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோயில் உபயதாரர்கள், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் விழா குழுவினர் மேற்கொண்டனர்.
