விருத்தாசலம், பிப். 11: நெய்வேலி பெரியாக்குறிச்சி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் இலவச மனை பட்டா கேட்டு விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த கணவன், மனைவி இருவருக்கும் இடையே திடீரென பிரச்னை ஏற்பட்டது. அப்போது கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மனைவி தன்னுடைய கையில் வைத்திருந்த பாத்திரத்தால் கணவனின் காதில் அடித்ததில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட அவரது மனைவியை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
