×

அண்ணாவுக்கு மரியாதை

ஆண்டிபட்டி, பிப். 4: அண்ணாவின் 52வது நினைவு தினம் நேற்று மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.  ஆண்டிபட்டி பஸ்நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு திமுக சார்பில் எம்எல்ஏ மகாராஜன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜாராம், அமமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் தவச்செல்வம், சுரேஷ், அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், மதிமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடமலைக்குண்டுவில் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி தலைமையில் அண்ணா படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். கம்பத்தில் திமுக சார்பில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில், அதிமுக சார்பில் நகர செயலாளர் ஜெகதீஷ், மதிமுக சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், அமமுக சார்பில் அம்மா பேரவை செயலாளர் அறிவழகன் தலைமையிலும் அண்ணா படத்திற்கு மாலையணிவி–்த்து மரியாதை செலுத்தினர். பெரியகுளத்தில் திமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், அதிமுக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லமுத்து தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Anna ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு