சிதம்பரம், பிப். 13: கடலூர் கூத்தப்பாக்கம் ஆனந்த முதலியார் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் கரண் (24). இவர் சிதம்பரம் பழைய புவனகிரி ரோடு பகுதியில் வசிக்கும் சித்தி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். பின்னர் கரண் சிறுமியை கடலூர் கூத்தப்பாக்கம் வீட்டிற்கு அழைத்து சாமி அறையில் வைத்து தாலி கட்டியுள்ளார். பின்னர் கரண் சிறுமியை கடலூர் அரசு மருத்துவமனைக்கு சோதனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து கரணை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
