×

வெண்டை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

போடி, பிப். 13: போடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் கொட்டக்குடி ஆற்று நீரையும், கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் கிடைக்கும் பாசன நீரைக் கொண்டு பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், போடி-தேனி சாலையில் உள்ள அணைக்கரைப்பட்டி, தோப்புப்பட்டி, வனகிரி பண்ணை தீர்த்த தொட்டி, கோடாங்கிபட்டி, வாய்க்கால்பட்டி சாலி மரத்துப்பட்டி என பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கக்கூடிய நிலை இருப்பதால் சாகுபடி பரப்பை விவசாயிகள் அதிகரித்துள்ளனர். இந்த வெண்டை பயிரானது 70 நாட்களில் அறுவடை செய்யப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பிவைக்கப்படும். சந்தைகளில் வெண்டைக்காய்க்கு எப்போதும் தேவை அதிகமாக இருப்பதால் வேறு பயிர்களை சாகுபடி செய்து அறுவடை செய்த விவசாயிகளும் தற்போது வெண்டை சாகுபடி செய்து வருகின்றனர்.

 

Tags : Bodi ,Kottakudi ,Western Ghats ,Bodi-Theni ,
× RELATED வறண்டு வரும் கோமுகி அணை விவசாயிகள் வேதனை