சென்னை: சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. தாமதத்துக்கு தேர்தலை காரணமாக கூறக் கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளார். பைக் ரேஸ், வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக 4 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாள மாதிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
