×

மதஉணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 14 வாரம் சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விக்னேஸ்வரன் மோகனவேல்(36) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, பக்கத்து வீட்டு குழந்தைகள் விக்னேஸ்வரன் வீட்டை ஒட்டியுள்ள தாழ்வாரத்தில் வந்து விளையாடி கொண்டிருந்துள்ளனர். அவர்கள் உற்சாகமாக சத்தம் போட்டு, மகிழ்ச்சியுடன் விளையாடி உள்ளனர். குழந்தைகளின் சத்தத்தால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன் மலாய் முஸ்லிம் குடும்பம் வசிக்கும் வீட்டின் முன்பாக பன்றி இறைச்சியை வீசி உள்ளார். இது தொடர்பான வழக்கில் விக்னேஸ்வரனுக்கு 14 வாரம் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Tags : Singapore ,Wigneswaran Mohanav ,Diwali ,
× RELATED ஈரான் பொருளாதாரத்தின் உயிர்நாடியான...