×

இந்திய வம்சாவளி நகைகடையில் கொள்ளையடித்த கும்பல் சிக்கியது

வாஷிங்டன்: கலிபோர்னியாவின் ப்ரீமாண்டில் உள்ள குமார் ஜுவல்லர்ஸ் நகை கடை உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் முகமூடி அணிந்த கும்பல் கடைக்குள் புகுந்தது. முகமூடி ஒரு நிமிடத்திற்குள் ரூ.16 கோடி நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை கொள்ளையடித்து சென்றது. கடந்த ஜூன் மாதத்தில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. அதில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கடைக்குள் இருந்த கண்ணாடி பெட்டிகளளை உடைத்து அதில் இருந்த தங்கம், வைர நகைகளை பைகளில் போட்டு திருடி சென்றனர். திருட்டு கார்களை பயன்படுத்தி கொள்ளையர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொள்ளையர்கள் சென்ற காரை கண்டுபிடிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. எனினும் ஒரு காரை மடக்கி பிடித்து அதில் இருந்த, 4 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். எனினும் இந்த கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய கொள்ளையர்கள் இன்னும் பிடிபடவில்லை.

Tags : Washington ,Kumar Jewelers ,Fremont, California ,
× RELATED ஈரான் பொருளாதாரத்தின் உயிர்நாடியான...