×

உள்துறை அமைச்சர் அமித்ஷா 14ம் தேதி காரைக்கால் வருகை: பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

 

திருச்சி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ம் தேதி காரைக்காலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் (13ம் தேதி) தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். அன்றிரவு திருச்சியில் நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டு மறுநாள் (14ம் தேதி) திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார். காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் அமித்ஷா, அங்கிருந்து காரில் காரைக்கால் நகராட்சி சந்தை திடலுக்கு காலை 11 மணிக்கு வருகிறார். அங்கு பாஜ சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கூட்டம் முடிந்த பின் மீண்டும் ஹெலிகாப்டரில் திருச்சிக்கு வந்து விமானத்தில் சேலம் புறப்படுகிறார்.

அமித்ஷா திருச்சியில் தங்கியுள்ள 13, 14ம் தேதிகளில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பாஜ தலைவர்களும் திருச்சியில் முகாமிடுகின்றனர். பாஜ தலைவர்கள் அனைவரும் திருச்சி திருவானைக்காவல் மத் ஆண்டவன் கல்லூரியில் நடைபெறும் ‘பாரதம் அடுத்த தசாப்தம்’ என்ற நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமிருந்து தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். இதற்கிடையே அமித்ஷா 13ம் தேதி மாலை அல்லது 14ம் தேதி தமிழக தேர்தல் நிலவரம் குறித்து பாஜகவினருடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
அமித்ஷா வருகையையொட்டி காரைக்காலில் ஏற்பாடுகளை பாஜவினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

Tags : INTERIOR MINISTER ,AMITSHA ,KARAIKAL ,BAJA ,Trichy ,Union Interior Minister ,
× RELATED சர்ச்சையில் சிக்கிய தேர்தல் ஆணையம்:...