செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

ஈரோடு, பிப்.4:ஈரோடு அடுத்துள்ள பெரியசேமூர் பச்சபாளிமேடு என்ற இடத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகளால் கடுமையான பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் குடியிருப்பு பகுதியில் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி நேற்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>