×

நடராஜர் கோயிலுக்கு 50 பவுன் தங்க காசு மாலை காணிக்கை

சிதம்பரம், பிப். 11: நடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 50 பவுன் தங்க காசு மாலையை காணிக்கையாக வழங்கினார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வெளியூர், வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இக்கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை மற்றும் வெள்ளி பொருட்களை கோயிலில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்துவர். இந்நிலையில் நடராஜர் கோயிலுக்கு வந்த சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் கோயில் சித்சபையில் உள்ள சிவகாம சுந்தரி அம்பாளுக்கு சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவசுந்தர தீட்சிதரிடம் வழங்கினார். இதை தொடர்ந்து காணிக்கையாக அளிக்கப்பட்ட 50 பவன் தங்க காசு மாலை கால பூஜையின்போது, சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதர்களால் அணிவிக்கப்பட்டது.

Tags : Nataraja temple ,Chidambaram ,Chidambaram, Cuddalore district ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்