வடலூர், பிப். 11: வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் வடலூர் சத்திய ஞானசபை வளாகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஞான சபை புறக்காவல் நிலையம் அருகே சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் ராமநாதபுரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த ஹாசன் அப்துல்காதர்(42) என தெரிந்தது, இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து ஹாசன் அப்துல்காதரை கைது செய்தனர்.
