×

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பெரும்புதூர், பிப்.11: பெரும்
புதூர் அடுத்த வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாத கடைசி செவ்வாய்கிழமை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பிறகு ஏழு அடி உயரத்தில் காட்சி தரும் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மரிக்கொழுந்து மாலை அலங்காரத்தில் காட்சியளித்தார். கந்த சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மயிலிறகு மாலை அலங்கார சேவையில் காட்சியளித்தார். அடிப்படை வசதிகளை மண்டல இணை ஆணையர் குமரதுரை அறிவுரைப்படி, கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Vallakottai ,Murugan Temple ,Ko Puja ,Vallakottai Subramania Swamy Temple ,Perumbudur ,
× RELATED தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்ற பெண்ணின் வயிற்றில் நூல்கள்