×

உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் வாழ்த்து

மதுராந்தகம், மார்ச் 31: உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 8வது முறையாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரான க.சுந்தர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து, குறிஞ்சி இல்லம் சென்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். மேலும் மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 8வது முறையாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏவிற்கு திமுக கட்சி நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று.. வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து வேட்பாளர் சுந்தர் வாக்காளர்களிடம் பேசுகையில், பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.2000, வருமான வரி செலுத்தாத பெண்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிக்கொள்ள இல்லத்தரசி என்ற புதிய திட்டத்தில் ரூ.8000 கூப்பன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 உயர்த்தி வழங்கப்படும், முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் காப்பீடுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும், ரூ. 1.5 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட மகத்தான திட்டங்களை நம் தலைவர் அறிவித்துள்ளார் என்று பேசினார்.

Tags : DMK ,Uthiramerur ,K. Sundar ,Chief Minister ,Deputy Chief Minister ,Madhurantakam ,Uthiramerur assembly ,M.K. Stalin ,Kanchipuram district ,M.K. Stalin… ,
× RELATED காஸ் விலை உயர்வு, தட்டுப்பாட்டை...