×

அரூரில் ரூ.4.45 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூர்,பிப்.11: அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 35 விவசாயிகள் 160 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்திருந்தனர். ஏலத்தில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ரூ.8,300 முதல் ரூ.8,469 வரை ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக ரூ.4.45 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Aroor ,Dharmapuri Agricultural Sales Committee ,Aroor Kachcherimedu ,Morappur ,Kambainallur ,Theerthamalai ,Kottapatti… ,
× RELATED விடுமுறை தினம் என்பதால்...