×

தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு

 

திருவாடானை, பிப்.10: திருவாடானை தீயணைப்புத்துறை சார்பில், தனியார் செக்யூரிட்டிகளுக்கான தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. திருவாடானை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை சார்பில், தனியார் செக்யூரிட்டிகளுக்கான தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்படும்போது செய்யக்கூடிய அவசரகால தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொள்வது குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Thiruvadana ,Thiruvadana Fire Department ,Fire and Rescue Services Department ,Thiruvadana Fire Station… ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்