×

டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்க நடவடிக்கை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

 

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் நேற்று பிப்ரவரி 8ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மிக முக்கியமான அரசுப்பணிக்கான தேர்வுக்கு பணிகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை.

தேர்வுக்காக இரவு பகல் பாராமல் படித்து தங்களை தயார் செய்து கொண்டு லட்சியக் கனவுகளோடு தேர்வுக்கு வந்தால் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பானது தேர்வர்களுக்கு தடை ஏற்பட்டு வருத்தம் ஏற்பட்டது. சில தேர்வு மையங்களில் குளறுபடிகள் ஏற்பட்டதால் தேர்வர்கள் மறியல் போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாடு முழுக்கவே தேர்வை ஒத்தி வைத்து, மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கும், கால தாமதம் ஏற்பட்டதற்கும், தேர்வு எழுத வந்தவர்களின் மனம் வருந்தியதற்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற குறைகள் வரும் காலத்தில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : TNPSC ,G. K. ,Chennai ,Tamaga Chairman ,Vasan ,TNPSC Group 2 ,Group 2A ,Tamil Nadu ,
× RELATED சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கியது