மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), 2025-26 சீசனுக்கான (அக்டோபர் 1, 2025 முதல் செப்டம்பர் 30, 2026 வரை) இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் சீனியர் அணிகளுக்கான ஆண்டு வீரர் ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ‘பி’ தரத்திற்குத் தரம் குறைக்கப்பட்டனர்.
