×

வில் வித்தை இந்தியாவுக்கு இரண்டு தங்கம்

பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில், ஆசிய கோப்பை உலக ரேங்கிங் வில் வித்தை போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் காம்பவுண்ட் தனி நபர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் உதய் கம்போஜ், சக இந்திய வீரர் பிரதமேஷ் ஜாவ்கரை, 145-144 எ்னற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

அதேபோல் காம்பவுண்ட் கலப்பு அணி பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரஜத் சாவ்ஹான்- சிகிதா தனிபர்தி இணை, மலேசிய இணையை, 158-156 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. மேலும், நேற்று நடந்த ரீகர்வ் பிரிவு போட்டிகளில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியது. மொத்தத்தில் இந்தியா, 2 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களை பெற்றுள்ளது.

Tags : Archery India ,Bangkok ,Asian Cup World Ranking Archery Championships ,Bangkok, Thailand ,Uday Kamboj ,Prathamesh Jawkarai ,
× RELATED ஐபிஎல்லுக்கு புதுசு திறமைக்கு மவுசு