சென்னை: ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றது. ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தயாரிப்பு நிற்வனம் வழக்கை வாபஸ் பெற்றது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை குழு மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க தனிநீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
சென்னை ஐகோர்ட் வழங்கிய இடைக்கால தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்றது. ஜனநாயகன் பட சான்று விவகாரத்தை சென்னை ஐகோர்ட் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கை திரும்பப் பெறுவதாக படக்குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளதால், வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
வழக்கை திரும்பப் பெறுவதற்கான கடிதத்தை படக்குழு சார்பில் வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியம் நீதிமன்றத்தில் வழங்கினார். சென்சார் போர்டு மறு ஆய்வு குழுவை அணுகி உள்ளதால், மறு ஆய்வுக்குழு 20 நாட்களில் படத்தை பார்த்து ஆலோசித்து திருத்தங்களை சொன்னபின் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

